நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம்
நேபாளத்தில் நேற்று(22) காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதென தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, அதன் அண்டை மாவட்டங்களான தோதி, அச்சாம், பஜுரா மற்றும் சூடூர் பச்சிம் மாகாணத்திற்கு உட்பட்ட பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்புக்காக வேறு இடங்களுக்கு தப்பியோடியள்ளனர். இதில், சில வீடுகள் முழுவதுமாகவும் சில வீடுகள் பகுதியாகவும் இடிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி நேபாளத்தின் மேற்கு பகுதியில் இதே போன்றதொரு நிலநடுக்கம் உணரப்பட்டதோடு அது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் டெல்லி-என்.சி.ஆர். பகுதியிலும் உணரப்பட்டிருக்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.