tamilni 9 scaled
உலகம்செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம்: விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை- பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிப்பு

Share

ஜப்பான் கடலில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களின் கடற்கரையில் மாலை 4 மணிக்குப் பிறகு நிலநடுக்கங்கள் பதிவாகியதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஷிகாவாவை மையமாக கொண்டு உருவான தொடர் நில அதிர்வுகளால் கடல் அலைகள் 16.5 அடி வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மக்கள் உயரமான பகுதிகளுக்கோ அல்லது உயர்ந்த கட்டிடங்களின் மேல்தளத்திற்கோ விரைவாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணுமின் நிலையங்களில் உள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹொகுரிகு மின் உற்பத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...