பிரித்தானிய நகரங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்
பிரித்தானிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பயங்கர சத்தம் மற்றும் நடுக்கத்தை உணர்ந்தனர்.
பிரித்தானியாவில் ஜூன் 28ம் திகதி புதன்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட்(Stoke-On-Trent), ஸ்டாஃபோர்ட்ஷையர்(Staffordshire) மற்றும் டெர்பிஷையர்(Derbyshire) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயங்கர சத்தம் மற்றும் நில அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
வால்கானோ டிஸ்கவரி என்ற நிலநடுக்க கண்காணிப்பு இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இரவு 9:19 மணிக்கு பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு மற்றும் பாதிப்பின் அளவு போன்றவற்றின் விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில், நடுக்கம் உணரப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் அதிர்ச்சியில் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
நிலநடுக்கம் தொடர்பாக பிரித்தானியாவின் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தகவலில், நான் எனது கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்த போது சிறிய இரைச்சல் சத்தம் கேட்டது, அது பின்னர் பெரிய சத்தத்துடன் எனது கால்களுக்கு கீழே உள்ள தரையை நடுங்க செய்தது, இது ஒருவேளை மிகப்பெரிய வெடிப்பாக இருக்கும் அல்லது நிலநடுக்கமாக இருக்கும் என்று உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.
மற்றொரு நபர் தெரிவித்த தகவலில், இரத்தம் தோய்ந்த பேய் பெட்டியை போல் எனது படுக்கை அசைந்தது என தெரிவித்தார்.
Leave a comment