பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image 1000x630 3 1

பிலிப்பைன்ஸில் இன்று (அக்டோபர் 17, 2025) 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் யுனியன், சுர்காவோ தீவிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் காரணமாகக் கட்டிடங்கள் குலுங்கினாலும், பெரிய அளவில் சேதமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என வெளிநாட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

குறித்த பகுதியில் மிண்டானாவோ தீவின் கிழக்குப் பகுதியில் 7.4 மற்றும் 6.7 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Exit mobile version