11 7
இந்தியாஉலகம்செய்திகள்

அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் தரக்குறைவாக யாரையும் விமர்சிக்க கூடாது- விஜய் உத்தரவு

Share

அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் தரக்குறைவாக யாரையும் விமர்சிக்க கூடாது- விஜய் உத்தரவு

தவெக தலைவர் விஜய் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அரசியல் பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதில்.., “தங்கள் மாவட்டங்களில் தாங்களும், தங்களுக்குக் கீழ் உள்ள கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளிலும், கழக நிர்வாகிகள் மேடையில் மைக்கில் பேசும் போது நம் கட்சியின் வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதி வளர்ச்சி குறித்தும், தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் நம் கட்சியின் கொள்கைகள் குறித்தும் மட்டுமே பேச வேண்டும்.

எக்காரணத்தை கொண்டும் அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் மேடையிலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் மற்றவர்களை சுட்டிக்காட்டி அரசியல் பேசுவதையோ அல்லது மற்றவர்களை தாக்குவதை போல பேசுவதையோ தவிர்க்க வேண்டும்.

நம் கழக நிர்வாகிகள், தோழர்கள் எந்த மேடையில் பேசினாலும் அது மக்களின் பிரச்சினைகள் மற்றும் நமது நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பேச வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...