மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்! டொனால்டு டிரம்ப்

24 6649afbb0616e

மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்! டொனால்டு டிரம்ப்

அமெரிக்க தலைமையின் திறமையின்மையால் மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், ஜோ பைடன் (Joe Biden) அரசை விமர்சித்து வரும் டொனால்டு டிரம்ப், தற்போது உலகப்போர் வெடிக்கலாம் என பகீர் கிளப்பியுள்ளார்.

Minnesota-வில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப் (Donald Trump), ”இன்றைய ஆயுத பலம் மிகவும் பயங்கரமாக இருப்பதால், இந்த நாட்டை நடத்தும் முட்டாள்களால் நிறைய பேர் எஞ்சியிருக்க மாட்டார்கள்.

திறமையற்றவர்கள் ஆட்சி நடத்துவதால் அடுத்த 5 மாதங்கள் உலகப்போரில் முடிவடையலாம். பாருங்கள் மிகவும் பலவீனமான நாடு நம்மிடம் உள்ளது. நம் நாட்டை முட்டாள்கள் வழி நடத்துகிறார்கள்.

நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், ரஷ்யா-உக்ரைன் மோதல், மத்திய கிழக்கு மோதல் அல்லது அதிக பணவீக்கம் போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது” என தெரிவித்தார்.

Exit mobile version