உலகம்செய்திகள்

கருத்துக் கணிப்பில் வலுக்கும் ட்ரம்ப்பின் ஆதரவு

Share
tamilni 340 scaled
Share

கருத்துக் கணிப்பில் வலுக்கும் ட்ரம்ப்பின் ஆதரவு

அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை பின்னுக்குத் தள்ளி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட பிரதான மாகாணங்களில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை, டொனால்ட் டிரம்ப் பின்னுக்குத் தள்ளிய விடயம் கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ளது.

2020 தேர்தலில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜியா மாகாணத்தில் ஜோபைடன் வெற்றியை தன்வசமாக்ககியிருந்தார்.

எனினும் தற்போது குறித்த மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் ஐந்து சதவீத அதிக வாக்குகளை பெறக்கூடும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த தேர்தலில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் கைப்பற்றிய மிச்சிகன் மாகாணத்தில், டொனால்ட் டிரம்ப் 10 சதவீத வாக்குகள் அதிகமாக பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களிலும், பைடனை டிரம்ப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெறக்கூடும் என கருத்துக் கணிப்பில் கூறப்படுகிறது.

இதன்படி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் கொள்கைகள், பொருளாதார நிலைமையை மோசமாக்கி இருப்பதும், அதன் தாக்கம் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளில் எதிரொலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...