5 22
உலகம்

ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா?

Share

ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா?

தொடர்ந்து நேட்டோ அமைப்பை விமர்சித்து வருபவரான ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா என்ற கேள்வி பல நாடுகளின் தலைவர்களிடையேயும் காணப்படுகிறது.

ட்ரம்ப் தொடர்ச்சியாக நேட்டோ அமைப்பை விமர்சித்து வருவதுடன், ஐரோப்பிய நாடுகள், பாதுகாப்புக்கு குறைந்த அளவிலேயே செலவு செய்யும் நிலையில், அமெரிக்கா நேட்டோவின் பட்ஜெட்டுக்கு அளவுக்கு அதிகமாக நிதி ரீதியாக பங்களிப்பைச் செய்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுமா என்ற கேள்வி மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

ஆனால், அமெரிக்கா நேட்டோவை புறக்கணிக்காது என தான் நம்புவதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான John Healey தெரிவித்துள்ளார்.

நேட்டோவுடனான கூட்டணி முக்கியமானது என்பதை அமெரிக்காவுக்குத் தெரியும் என்றும், ஐரோப்பாவுடன் முரண்பாட்டை தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார் John Healey.

அதே நேரத்தில், ஐரோப்பிய நாடுகள் நேட்டோவுக்கு நிதி வழங்கும் விடயத்தில் இன்னமும் அதிக பங்களிப்பைச் செய்யவேண்டும் என ட்ரம்ப் கூறுவது சரிதான் என்று கூறியுள்ள John Healey, தானும் அதே கருத்து தொடர்பில் விவாதித்துவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 73
செய்திகள்உலகம்

50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுப் பயணம்: விண்வெளியில் இருந்து பூமி ‘தலைகீழாக’ தெரியும் அற்புதப் புகைப்படம்!

சுமார் அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின்...

Untitled 64
செய்திகள்உலகம்

2 ஆண்டு காலப் பிரிவிற்குப் பின் தாயுடன் இணைந்த ‘பிஸ்ஸான்’: காசாவில் நெகிழ்ச்சியூட்டும் குடும்ப மீள் இணைப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் போரின் மிகக் கொடூரமான அத்தியாயங்களில் ஒன்றாக, 2023-இல் அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து எகிப்திற்கு...

Untitled 59
உலகம்செய்திகள்

நிச்சயமாக, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் மானியங்கள் குறித்த விரிவான செய்தி இதோ:

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 43% அதிரடி உயர்வு: ஈரான் போரால் ஸ்தம்பித்தது பொருளாதாரம்! ஈரானில் நிலவும்...