12 3
உலகம்செய்திகள்

ஆப்பிரிக்காவின் பிரபல நாடொன்றுக்கும் நிதி நிறுத்தம்: ட்ரம்ப் கூறும் காரணம்

Share

மனித உரிமை மீறல் நடைபெறுவதாக கூறி, தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியை டொனால்ட் ட்ரம்ப் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடியான நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக அவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதுதொடர்பான அவரது அறிவிப்பில், “தென் ஆப்பிரிக்க நாட்டில் புதிய நில அபகரிப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. இதற்கு துணையாக அமெரிக்கா நிற்காது. அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி விதிப்பையும், கடுமையான பொருளாதார தடைகளையும் ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் ட்ரம்ப் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...