4,000 டொலர்களை கடித்துக் குதறிய செல்லப்பிராணி: அதிர்ச்சியில் ஆழ்ந்த தம்பதியர்

24 65991f7833825

அமெரிக்காவில், ஒரு தம்பதியரின் செல்லப்பிராணியாகிய நாய் ஒன்று, 4,000 டொலர்கள் பணத்தைக் கடித்துக் குதறியதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் வாழும் தம்பதியர் கிளேய்ட்டன் மற்றும் கேரி லா. (Clayton, Carrie Law). வேலி அமைப்பதற்காக காண்ட்ராக்டர் ஒருவருக்கு கொடுப்பதற்காக கிளேய்ட்டன் 4,000 டொலர்களை வங்கியிலிருந்து எடுத்து, ஒரு கவரில் போட்டு மேசையில் வைத்திருந்திருக்கிறார்.

சிறிது நேரத்திற்குப் பின் அறைக்குத் திரும்பிய கிளேய்ட்டன், பணத்தை தங்கள் செல்ல நாயாகிய சிசில் கடித்துக் குதறிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் சத்தமிட்டுள்ளார்.

அதைக் கேட்டு தனக்கு இதயமே நின்றுவிட்டது போலிருந்ததாக தெரிவிக்கிறார் கேரி (33).

தம்பதியர், நாய் கடித்துக் குதறிய பணத்தை சேகரித்து எவ்வளவு பணம் கிழியாமல் பத்திரமாக உள்ளது என்று பார்க்க, 450 டொலர்கள் மட்டுமே நாசமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

அந்த பணத்துடன் தம்பதியர் வங்கிக்குச் சென்று நடந்ததைக் கூற, வங்கி ஊழியர்களோ, இப்படி அடிக்கடி நடப்பதாகவும், கிழிந்த பணத்தில் சீரியல் நம்பர் மட்டும் சரியாக தெரிந்தால், அதற்கான பணத்தை திருப்பிக் கொடுப்பதாகவும் தெரிவிக்க, தம்பதியர் ஆறுதல் அடைந்துள்ளனர்.

Exit mobile version