சார்லஸை கடுமையாக பழிவாங்கிய இளவரசி டயானா
பிரித்தானிய இளவரசி டயானா மற்றும் சார்லஸின் கசப்பான விவாகரத்து சம்பவம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அப்போதைய இளவரசர் சார்லஸை பிரிய முடிவு செய்ததும், தமது வாழ்க்கையில் இனி சார்லஸ் குறித்த எந்த நினைவுகளும் வேண்டாம் என டயானா முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இளவரசர் சார்லஸின் உடைகளை வரை அவர் தீயிட்டு கொளுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 1981ல் மிக ஆடம்பரமாக சார்லஸ்- டயானா தம்பதியின் திருமணம் நடந்தது.
இருப்பினும் அவர்களின் வயது வித்தியாசம் மற்றும் முற்றிலும் மாறுபட்ட கருத்து காரணமாக அவர்களின் குடும்ப வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்த நிலையில், 1991ல் இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளனர்.
இருப்பினும், விவாகரத்து பெறும் எண்ணம் அவர்கள் இருவரிடமும் அப்போது இல்லை என்றே கூறப்படுகிறது. இருவரும் ஒருமனதாக பிரிவதாக முடிவு செய்ததும், உடனடியாக கென்சிங்டன் அரண்மனையில் 8 மற்றும் 9ம் தளத்தின் பூட்டுகளை டயானா மாற்றியுள்ளார்.
கொந்தளிப்பை ஏற்படுத்தும் செய்கை
அத்துடன் புதிய தொ,லைபேசி இலக்கம் ஒன்றையும் பெற்றுள்ளார். ஆனால் வேறு வழியின்றி சார்லஸ் தமது உடைமைகள் அனைத்தையும் கென்சிங்டன் அரண்மனையில் இருந்து செயின்ட் ஜேம்ஸ் அரண்மனைக்கு மாற்றியுள்ளார்.
இதனிடையே, சார்லஸ் விட்டுச் சென்ற அனைத்து பொருட்களையும், உடைகள் உட்பட டயானா தீயிட்டு கொளுத்தியுள்ளார். இருவரும் தனியாக பிரிந்தாலும், விவாகரத்துக்கு ராணியார் ஒப்புதல் அளிக்க பல ஆண்டுகள் நீண்டது.
1996ல் கடைசியாக சார்லஸ் – டயானா தம்பதி விவாகரத்து பெற்றனர். இதற்கு ஓராண்டு முன்னர், அரச குடும்பத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் செய்கை ஒன்றை டயான முன்னெடுத்தார்.
1995ல் பிபிசி ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், சார்லஸ் உடனான திருமணத்தில் நாங்கள் மூவர் உட்பட்டிருந்தோம் என்றார். இந்த ஒற்றை வரி அரச குடும்பத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. டயானா குறிப்பிட்ட அந்த மூன்றாவது நபர் தற்போதைய பிரித்தானிய ராணியார் கமிலா என்பது குறிப்பிடத்தக்கது.
 
                                                                                                                                                 
                                                                                                     
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
			         
 
			         
 
			         
 
			        
Comments are closed.