tamilnaadij 2 scaled
உலகம்செய்திகள்

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்

Share

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்

திரவம் நிரப்பிய கண்ணாடி போத்தல்களுக்குள் இரண்டு குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் என்று கருதப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்ஹொங்கின் Tuen Mun பகுதியில் காலியாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு ஆண் குழந்தைகளின் சடலத்தை தனித்தனி கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையில் துப்புரவு பணியாளர் ஒருவர் கண்டெடுத்தார்.

தகவல் அளிந்த பொலிசார் முன்னெடுத்த நடவடிக்கையில் 24 வயது ஆணும் 22 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில்,

வெள்ளிக்கிழமை பகல் 10 மணியளவில் குடியிருப்பு உரிமையாளரால் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளியால் அந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இரு கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. ஆனால் நிரப்பட்ட திரவம் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், இரண்டு குழந்தைகளின் இறப்புக்கான காரணம் தடயவியல் நோயியல் நிபுணரால் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...