மோக்கா புயலால் மியன்மாரில் 89 பேர் உயிரிழப்பு!

மோக்கா புயலால் மியன்மாரில் 89 பேர் உயிரிழப்பு!

வங்காளதேசம்-மியான்மர் இடையே மோக்கா புயல் கரையை கடந்துள்ள நிலையில் இதனால் மியான்மரில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு இடம்பெற்றுள்ளது.

புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் ஐந்து லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல் மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன.

அங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.

அங்குள்ள ராக்கென் மாகாணத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

#world

Exit mobile version