ஜப்பானில் இரு விமானங்கள் உரசி கொண்டதால் பரபரப்பு

tamilnaadi 20

ஜப்பானில் இரு விமானங்கள் உரசி கொண்டதால் பரபரப்பு

ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் உரசி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இரு விமானங்களும் ஒசகாவில் உள்ள இடாமி விமான நிலையத்தில் உரசி கொண்டுள்ளன.

திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உரசி கொண்ட இரு விமானங்களும் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் காரணமாக இரு விமானங்களின் இறக்கை பகுதியில் கீறல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஜப்பானில் விமான விபத்துகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version