மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா – ஹாரி, மேகன் தம்பதிக்கு அழைப்பு

1845787 harry

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.

இதில் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கலே ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

எனினும், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இளவரசர் ஹாரி தம்பதி இங்கிலாந்து செல்வார்களா? என்பது பற்றிய தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

#world

Exit mobile version