கொரோனா தொற்றாளர்கள் உடலுறவு உல்லாசம்! – மிரண்டு போன மருத்துவர்கள்!!

covid patient sex

தாய்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றில் தொற்றாளர்கள் பலர் சக தொற்றாளர்களுடன் உடலுறவு வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்,

இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தாய்லாந்தின் பாங்கொங் மாகாணத்தில் உள்ள சமுத் பிராதான் என்ற இடத்தில் ஆயிரம் படுக்கைகளுடன்கூடிய கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்று இயங்குகின்றது. அந்த சிகிச்சை நிலையத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

அங்கு சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டிருந்த தொற்றாளர்கள், இரவு நேரங்களில் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி போதைப்பொருள் பயன்படுத்துவது, சிகரெட் புகைப்பது என உல்லாச விடுதியில் இருப்பது போன்று இருந்துள்ளனர்.

அது மட்டுமல்லாது அங்குள்ளவர்கள் சக தொற்றாளர்களுடன் உடலுறவிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையெல்லாம் பார்த்து மிரண்டுபோன மருத்துவர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் தற்போது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அங்குள்ள சி.சி.ரி.வி. பதிவுகள் ஆராயப்படுகின்றன.

அதேவேளை. ஆண், பெண் தொற்றாளர்கள் தற்போது வேறு, வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version