அமெரிக்காவில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 11 ஆயிரம் தொற்றாளர்களாக பதிவாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு நாள் கொரோனாத் தொற்று 1.50 லட்சத்தை கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி அமெரிக்காவில் இதுவரை மொத்த கொரோனாத் தொற்று எண்ணிக்கை 4 கோடியே 6 லட்சத்து 97 ஆயிரத்து 726 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றால் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.