பிரான்ஸ் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டதுமே உருவாகியுள்ள சர்ச்சை

OIP 18

பிரான்சின் புதிய பிரதமராக, முன்னாள் கல்வித்துறை அமைச்சரான கேப்ரியல் அட்டால் என்பவர், ஜனாதிபதி இமானுவல் மேக்ரானால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் பொறுப்பேற்றதுமே சமூக ஊடகங்களில் அவருக்கெதிரான கருத்துக்கள் பரவி சர்ச்சையை உருவாக்கி வருகின்றன.

பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கேப்ரியல், யூத குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தை யூதர், அவரது தாய் கிறிஸ்தவர்.

கேப்ரியலும் கிறிஸ்தவராக ஞானஸ்நானம் பெற்றவர். ஆனால், கேப்ரியலின் தந்தை, நீ உன் வாழ்நாள் முழுவதும் யூதனாகத்தான் பார்க்கப்படுவாய் என்றும், உன் பெயரின் இரண்டாவது பகுதியிலுள்ள பெயர் யூத பெயர் என்பதால், எப்போதும் யூத எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் கேப்ரியல்.

கேப்ரியலின் தந்தை கூறியது உண்மையாகிவிட்டது. ஆம், சமுக ஊடகங்களில் கேப்ரியலுக்கு எதிரான யூத வெறுப்பு கருத்துக்கள் வெளியாகிவருகின்றன.

கேப்ரியல் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுவருவதை, பிரான்ஸ் யூத மாணவர்கள் யூனியன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இப்படி விமர்சிப்பவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

Exit mobile version