எதிர்வரும் திங்கட்கிழமை(05.05.2025) புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு நடைபெறும் என எதிர்பார்ப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் இறந்ததைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரை தேர்தெடுப்பதற்காக கர்தினால்கள் வத்திக்கானில் கூடிவருகின்றனர்.
துக்க காலம் முடிந்த பிறகு, மே 5 அல்லது 6ஆம் திகதிகளில் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாநாடு சிஸ்டைன் தேவாலயத்தில் இரகசியமாக நடைபெறவுள்ளது.
அத்துடன், புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கு மூன்றில் ஒரு பெரும்பான்மை தேவைப்படுகின்றது.
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு பின்னர், இத்தாலிய கார்டினல் பியட்ரோ பரோலின், பிலிப்பைன்ஸ் கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டக்லே மற்றும் கானாவின் கார்டினல் பீட்டர் டர்க்சன் ஆகியோர் விருப்பத் தேர்வுகளாக உள்ளனர்.
இந்நிலையில், 80 வயதிற்குட்பட்ட 135 கர்தினால்கள் மட்டுமே மாநாட்டில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.