நடுவானில் விமானத்திற்குள் நாகபாம்பு!

download 6 1 1 1

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விமானியான ருடால்ப் எராஸ்மஸ் என்பவர், நான்கு பயணிகளுடன் ஒரு சிறிய விமானத்தில் வொர்செஸ்டரில் இருந்து நெல்ஸ்ப்ரூட் வரை சென்று கொண்டிருந்தார்.

நடுவானில் 11 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது, அவரின் இருக்கைக்கு அடியில் ஒரு நாகப்பாம்பு தலையை தூக்கி நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பதற்றம் கொள்ளாமல், விமானத்தை சீராக இயக்கினார்.

தொடர்ந்து அவர், சக பயணிகளிடம், விமானத்தின் உள்ளே பாம்பு உள்ளது. அது என் இருக்கைக்கு அடியில் இருப்பதை உணர்ந்தேன். எனவே விமானத்தை விரைவில் தரையிறக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் அவர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்புகொண்டு சூழ்நிலையை விளக்கி விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.

தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் சக பயணிகளை காப்பாற்றிய விமானியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

#world

Exit mobile version