அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

narendra modi joe biden PTI09 24 2021 000302B

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்தார்.

டெல்லியில் G20 மாநாடு நேற்று தொடங்கியது. இதில் உலகின் முக்கிய தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உலக நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து அளித்தார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார்.

அப்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் ‘காவேரி மேசையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தொகுத்து வழங்கிய G20 மாநாட்டில் ஜோ பைடன், நரேந்திர மோடியுடன் கலந்துகொண்டேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version