உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.
இதில் 17 பேர் காயமடைந்ததுடன் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என ஐ.நா. சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குட்டரெஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது.
தமக்கு தொடர்பில்லாத போருக்கு பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வருகின்றனர். இந்த அர்த்தமற்ற வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
#WorldNews
Leave a comment