24 663dbeb1790fd
உலகம்செய்திகள்

உலகிலேயே முதல் முறையாக… Gene Therapy மூலம் கேட்கும் திறன் பெற்ற குழந்தை

Share

உலகிலேயே முதல் முறையாக… Gene Therapy மூலம் கேட்கும் திறன் பெற்ற குழந்தை

பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாமல் பிறந்த ஒரு பிரித்தானியக் குழந்தை, உலகிலேயே முதன்முறையாக Gene therapy மூலம் செவித்திறனை மீண்டும் பெற்றுள்ளதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

பிரித்தானியாவின் Oxfordshireஐச் சேர்ந்த Jo மற்றும் James Sandy (33) தம்பதியரின் மகளான Opal Sandy என்னும் குழந்தை, auditory neuropathy என்னும் பிரச்சினை காரணமாக பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாமல் பிறந்தாள்.

இந்நிலையில், கேம்பிரிட்ஜிலுள்ள Addenbrooke’s மருத்துவமனையில், பேராசிரியர் Manohar Bance என்பவர் தலைமையில், சோதனை முறையில், Opalக்கு Gene therapy என்னும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை, எதிர்பார்த்ததைவிட நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக தற்போது தெரிவிக்கிறார் அவர்.

இந்த சிகிச்சையில், கேட்கும் பிறன் பாதிப்புக்குக் காரணமான DNA, ஆபத்தை ஏற்படுத்தாத வைரஸ் ஒன்றின் உதவியுடன் சரிசெய்யப்படுகிறது.

இந்த அரிய சோதனை முறை சிகிச்சைக்குப் பின், Opal கேட்கும் திறனை பெற்றுள்ளாள். ஆறு மாதங்களுக்குப் பிறகு மெதுவாகப் பேசுவதைக் கூட தெளிவாகக் கேட்கும் திறனைப் பெற்றுவிட்ட அவள், அம்மா, அப்பா என அழைப்பதைக் கேட்டு சொல்லமுடியாத மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் Jo மற்றும் James தம்பதியர்.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...