சாங்கி விமான நிலையத்தில் புதிய புரட்சி: பயணப் பெட்டிகளை ஏற்றிச் செல்ல ஆளில்லா வாகனங்கள் அறிமுகம்!

3rd generation Auto DollyTug at Changi Airport

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளை ஏற்றிச் செல்வதற்காக ஆளில்லா தானியக்க வாகனங்கள் (Autonomous Vehicles) முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் அதிநவீன கேமராக்களும் உணர்கருவிகளும் (Sensors) பொருத்தப்பட்டுள்ளன. 250 மீட்டர் தொலைவில் உள்ள தடைகளைக் கண்டறிந்து, அவற்றைத் தவிர்த்துத் தானாகவே விலகிச் செல்லும் திறன் கொண்டவை.

ஓராண்டு காலமாக நடைபெற்ற சோதனை ஓட்டத்தில், சுமார் 5,000-க்கும் அதிகமான பயணங்களை வெற்றிகரமாக இவை பூர்த்தி செய்துள்ளன.

சிங்கப்பூர் பிரதியமைச்சர் சுன் ஷுவெலிங் (Sun Xueling) இந்த வாகனங்களை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். இதன்போது அவர் சிங்கப்பூரின் மூப்படையும் ஊழியரணியின் (Ageing Workforce) பணிச் சுமையைக் குறைக்க இது உதவும்.

மோசமான வானிலை காரணமாகச் சேவைகளில் தடங்கல் ஏற்படும்போது, அதனைச் சமாளிக்க இந்தத் தானியக்கத் தொழில்நுட்பம் கைகொடுக்கும்.

பணியாளர்கள் வாகனம் ஓட்டும் வேலையிலிருந்து விடுபட்டு, இதர முக்கிய பணிகளில் கவனம் செலுத்த முடியும். இருப்பினும், வாகனங்களின் செயல்பாட்டை அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.

இந்த ஆளில்லா வாகனங்கள் தற்போது சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் முனையம் 4 ஆகியவற்றிற்கு இடையே தமது சேவையை ஆரம்பித்துள்ளன.

 

 

Exit mobile version