கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 04) புறப்பட்ட ஒரு சரக்கு விமானம், ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

விபத்து நடந்தபோது விமானத்தில் 1 லட்சத்து 44 ஆயிரம் லிட்டர் எரிபொருள் ஏற்றிச் செல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம் அருகே இந்த விபத்து நடந்ததால், பெரும் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Exit mobile version