07CANADA KILLING 01 facebookJumbo
உலகம்செய்திகள்

தன் குடும்பத்தையே வேன் மோதிக்கொன்ற கனேடியரை நேருக்கு நேராக பார்த்து வெளிநாட்டுப் பெண் கூறிய வார்த்தைகள்…

Share

கனடாவில், இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு குடும்பம் வேன் மோதிக்கொல்லப்பட்ட நிலையில், குற்றவாளியை நேருக்கு நேராகப் பார்த்து தன் உள்ளக் கொந்தளிப்பைக் கொட்டித் தீர்த்தார் ஒரு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்.

2021ஆம் ஆண்டு, ஜூன் மாதம், கனடாவில், ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், பாகிஸ்தானியர்களான Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman (44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9) மற்றும் Afzaalஇன் தாயார் Talat Afzaal, ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Nathaniel Veltman (20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதியிருக்கிறார்.

வேன் மோதியதில், Salman Afzaal, அவரது மனைவி Madiha Salman, மகள் Yumna Salman மற்றும் 74 வயதாகும் Afzaalஇன் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர். தம்பதியரின் மகன் Fayez Afzal படுகாயமடைந்தான்.

இந்த கோர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டNathaniel மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள், ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டு மற்றும் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.

உயிரிழந்தவர்களின் இழப்பு தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளை, நேற்று வியாழக்கிழமை, நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார்கள், அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும்.

அப்போது, கொல்லப்பட்ட Talat Afzaalஇன் மகளான Tabinda Bukhari, குற்றவாளியை நேருக்கு நேராகப் பார்த்து, நீ என் தாய் மீது வேனை மோதி அவருக்குக் கொடுத்த வேதனையை என்னால் அளவிடமுடியாது, உன் முன்னால் நின்று சொல்கிறேன், நீ எங்களிடமிருந்து விலைமதிப்பில்லாத ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டாய் என கண்ணீரை அடக்க முடியாமல் குமுறினார்.

எந்த குறுக்குச் சாலையில் நின்றாலும், உயிரிழந்த என் தாய், என் சகோதார், அவருடைய மனைவி, அவர்களுடைய மகள் என அவர்கள் அனைவரும் என்னுடன் நிற்பது போன்ற உணர்வை என்னால் தவிர்க்கவே முடியவில்லை என்கிறார் Tabinda.

அவர் கூறியதை, எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் கேட்டுக்கொண்டிருந்த Nathanielக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அவரது செயல்கள் தீவிரவாதச் செயல்களா என்பது குறித்து நீதிபதி Renee Pomerance விரைவில் முடிவு செய்ய உள்ளதால், அவரது முடிவுக்கேற்ப Nathanielஇன் தண்டனை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம், அதாவது, ஜனவரி 23ஆம் திகதி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...