24 663e8b274cadb
உலகம்செய்திகள்

ஜெர்மனியின் இராணுவ திட்டத்திற்கு கனடா உதவி

Share

ஜெர்மனியின் இராணுவ திட்டத்திற்கு கனடா உதவி

உக்ரைனுக்காக வான் பாதுகாப்பை வழங்குவதற்கான ஜெர்மனியின் திட்டத்திற்கு கனடா(Canada) பூரண ஆதரவை வழங்கும் என கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் உறுதியளித்துள்ளார்.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 76 மில்லியன் கனேடிய டொலர்களை(55 மில்லியன் அமொரிக்க டொலர்) உதவியாக வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் இடம்பெற்ற ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் உடனான சந்திப்பைத் தொடர்ந்து பில் பிளேர்(Bill Blair) ஒரு அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”ஜெர்மனியின் முயற்சியில் கனடா இணையும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இது உக்ரைனுக்கான வான் பாதுகாப்பு அமைப்புகளை விரைவாகவழங்க சர்வதேச சமூகத்திடம் இருந்து பணம் மற்றும் வளங்களை திரட்டுகிறது.

ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களைக் கொன்றது மற்றும் மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை அழித்த ரஷ்ய வான்வழி தாக்குதல்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிரான உதவியாகும்” என்று கனேடிய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனேடிய ஆயுதப்படை வீரர்கள் இப்போது ஜெர்மனியில் பாதுகாப்பு உதவிக் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், இது உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்கு உதவுகிறது என்றும் ஆயுதப்படைகளுக்கு உடனடி மற்றும் நீண்ட கால பயிற்சி தேவைகளை திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 17 அன்று, ஜேர்மன் அரசாங்கம் உக்ரைனுக்கு வழங்க கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கண்டறியும் முயற்சியைத் ஆரம்பித்தது.

டென்மார்க் மற்றும் நெதர்லாந்துடன் நிதி முயற்சிகளை ஆராய்வதாக ஜேர்மனி முன்னர் அறிவித்திருந்தது. மேலும், ஜெர்மனியின் முயற்சிக்கு 200 மில்லியன் யூரோக்கள் பங்களிப்பதாக ஏப்ரல் மாதம் பெல்ஜியம் கூறியாமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
Bribery Commission
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய இழப்பீடு மோசடி: ₹100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்ற 42 முன்னாள் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை!

அரகலய போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும்...

ak am 2003
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ச சொத்துக்கள்: இரகசிய நடவடிக்கையில் இறங்கிய அரசாங்கம்

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை...

G5xpi4CbkAAZwxm
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்ச – எம்.ஏ. சுமந்திரன் சந்திப்பு: NPP அரசுக்கு எதிரான நவம்பர் 21 பேரணி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்துக் கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இன்றையதினம் (நவ 15)...