3 5
உலகம்செய்திகள்

அமெரிக்க – கனேடிய இராஜதந்திர உறவுமுறைக்கு முற்றுப்புள்ளி.. கார்னி அதிரடி அறிவிப்பு

Share

அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகள் முடிவிற்கு வந்துவிட்டன என்று கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எங்களை சிதைக்கப்பார்க்கின்றார். அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என தெரிவித்துள்ள மார்க் கார்னி, இது ஒருபோதும் நடக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா எங்கள் வளங்களையும் நாட்டையும் தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது என நான் பல மாதங்களாக எச்சரித்துவந்தேன் என அவர் கூறியுள்ளார்.  கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது என குறிப்பிட்ட கார்னி , இது பெரும் துன்பியல் நிகழ்வு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இரண்டு சுதந்திர, இறைமையுள்ள தேசங்களின் எதிர்காலம் குறித்து நான் விரைவில் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன் எனவும் கார்னி தெரிவித்துள்ளார்.

மேலும், உலகிற்கான தலைமைத்துவத்தின் முன்னணியில் இருப்பதற்கு அமெரிக்கா விரும்பாவிட்டால் கனடா அதனை செய்யும் நாங்கள் வலுசக்தி வல்லரசாக மாறுவோம் எனவும் கனடாவின் புதிய பிரதமர் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...