7 45
உலகம்செய்திகள்

கனடாவுக்கான விசிட்டர் விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு : குழப்பத்தில் தமிழர்கள்

Share

கனடாவுக்கான விசிட்டர் விசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு : குழப்பத்தில் தமிழர்கள்

கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்ற வெளிநாட்டவர்கள் வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு விசிட்டர் விசாவில் வருவோருக்கு அங்கிருந்து வேலை விசாவுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கான கால எல்லையை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

விசிட்டர் விசாவில் கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் திட்டம் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அறிவித்துள்ளது.

விசிட்டர் விசா மூலம் கனடாவுக்கு அதிகளவான ஈழத்தமிழர்கள் சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பானது அவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 1 7
உலகம்செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு: சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள், கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதோடு,...

18 02 2025 GP parliament
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை சட்டவிரோத புத்தர் சிலை அகற்றம்: சாதாரண சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை, இனவாத காடையருக்கே பின்வாங்கியது துரோகம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசம்!

திருகோணமலையில் (திருமலை) சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றும் விவகாரம் தொடர்பாக, அரசாங்கத்தின் பின்வாங்கல் நடவடிக்கையைக்...