6 1 scaled
உலகம்செய்திகள்

ஆண்டுக்கு 500,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா திட்டம்: விவரம் செய்திக்குள்

Share

ஆண்டுக்கு 500,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா திட்டம்: விவரம் செய்திக்குள்

கனடா, 2024 -2026 ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. நேற்று மதியம் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

கனடா, 2024ஆம் ஆண்டில் 485,000 புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்க உள்ளது. 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில், 500,000 புதிய புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வரவேற்கப்பட இருக்கிறார்கள்.

2024இல், பொருளாதார பிரிவின் கீழ் 281,135 புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2026இல் 301,250ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

குடும்ப பிரிவில், 2024இல் 114,000 புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2026இல் 118,000ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

அகதிகள், பாதுகாக்கப்பட்ட நபர்கள் முதலான மனிதநேய பிரிவின் கீழ், 2024இல் 89,865 பேர் வரவேற்கப்பட இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 2026இல் 80,832ஆக குறைக்கப்பட உள்ளது.

அதாவது, ஒவ்வொரு ஆண்டும், அது தேர்தல் நடைபெறாத ஆண்டாக இருக்கும் பட்சத்தில், கனடாவின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பெடரல் அரசு, நவம்பர் மாதம் 1ஆம் திகதி தனது வருடாந்திர புலம்பெயர்தல் திட்டத்தை கண்டிப்பாக வெளியிட்டாக வேண்டும் என்பதாலேயே, தற்போது இந்த புலம்பெயர்தல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...