உலகம்செய்திகள்

வாகனத்திருட்டுக்களை குறைப்பதற்கு கனேடிய தமிழ் புலம்பெயர் அமைச்சர் எடுத்த நடவடிக்கை

Share
7 2
Share

திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தின் சட்டவிரோத பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், குற்றச் செயல்களை நாங்கள் தடுத்து, திருட்டுகள் நடப்பதற்கு முன்பே அவற்றைத் தடுக்க பொலிஸாருக்கு தேவையான கருவிகளை வழங்குகின்றோம்” என்று கனேடிய அமைச்சர் விஜய் தணிகாசலம்(Vijay Thanigasalam) தெரிவித்துள்ளார்.

திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு அதிகரித்து வரும் வாகனத் திருட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை ஒன்ராறியோ ஒரு புதிய சட்டமன்றத் திட்டத்துடன் முன்னெடுத்துள்ளது.

இதற்கிணங்க கீழ்வரும் சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. வாகனத் திருட்டில் பயன்படுத்தப்படும் என்று சந்தேகிக்கப்படும் ‘கீ ஃபோப்’ நிரலாக்க சாதனங்கள் மற்றும் ‘ஸ்கேனர்கள்’ போன்ற பொருட்களைக் கைப்பற்ற காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும்.

சட்ட நடைமுறையாக்கத்தை ஆதரிப்பதற்கும் அதிகளவில் திருட்டு நடைபெறும் இடங்களில் கவனம் செலுத்துவதற்கும் ஒரு புதிய பெரிய வாகனத் திருட்டு வழக்கு விசாரணை குழு நிரந்தரமாக்கப்படும்.

இம்முயற்சி ஒன்ராறியோ எங்கும் வாழும் மக்கள் தங்கள் சமூகங்கள் தீவிரமாகப் பாதுகாக்கப்படுவதை அறிந்து பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...