உலகம்

பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் அடிமையாகிவிட்டேன்… வழக்குத் தொடர்ந்த கனேடியர்

Share
24 66b8808a67cde
Share

பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் அடிமையாகிவிட்டேன்… வழக்குத் தொடர்ந்த கனேடியர்

பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாட்டில் இருந்து மீள முடியவில்லை, அடிமையாகிவிட்டேன் என குறிப்பிட்டு கனடாவின் Montreal பகுதியை சேர்ந்த இளைஞர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தற்போது 24 வயதாகும் அந்த நபர் கடந்த 2015 முதல் TikTok, YouTube, Reddit, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருவதாகவும், இதனால் உற்பத்தித்திறன் மற்றும் உடல் உருவத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், நாளுக்கு 4 மணி நேரம் சமூக ஊடக செயலிகளை பயன்படுத்தி வந்ததாகவும், ஆனால் அதன் தாக்கத்தில் இருந்து விடுபடும் பொருட்டு, 2 மணி நேரமாக குறைத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், தமது உற்பத்தித்திறன் மற்றும் தூக்கத்தில் அதன் தாக்கம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, 2024ல் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், ஒட்டுமொத்தமாக 500 மில்லியன் ஆண்டுகளுக்கான சமூக ஊடக பயன்பாட்டினை மனிதகுலம் பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

உளவியல் பலவீனங்களை பயன்படுத்தி
அதனால், இது தனியொருவருக்கான பிரச்சனை அல்ல, இது பலருக்குமான பரவலான பிரச்சனை என்றும் அந்த நபருக்கான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். மேலும், 7 முதல் 11 வயது வரையான 52 சதவிகித கனேடிய சிறார்கள் சமூக ஊடக பயன்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும்,

அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் பயனர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சமூக ஊடகங்கள் அனைத்தும் தற்போது பயனர்களின் உளவியல் பலவீனங்களை பயன்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்ளும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும், நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அன்றாட வாழ்க்கையில் அதன் பாதிப்பு இருக்கும் என்றும் அந்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

20 5
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்த ஏமனின் ஏவுகணை

ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில்...

18 4
உலகம்செய்திகள்

பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்

தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...