அமெரிக்காவுக்கு கனடா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
தமது நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படுமானால் அமெரிக்காவிற்கு(us) வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என கனடா(canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்(donald trump) தான்பதவியேற்றவுடன் கையெழுத்திடும் முதல் ஆவணங்களில் ஒன்று, கனடா, மெக்சிகோ(mexcio) முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பது தொடர்பானதுதான் என்று தெரிவித்திருந்த நிலையிலேயே கனடாவின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
2023ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 1.5 மில்லியன் வீடுகளுக்கு கனடா மின்சாரம் வழங்கியுள்ளது. அத்துடன், மிச்சிகன், மின்னசோட்டா மற்றும் நியூயோர்க்குக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடு கனடா ஆகும்.
அண்மையில் அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதற்காக வோஷிங்டன் டிசிக்கு சென்றிருந்த ஒன்ராறியோ பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சரான Vic Fedeli, அமெரிக்கா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் 60 சதவிகிதம் கனடாவிலிருந்துதான் வருகிறது.
ஆக, நீங்கள் இறக்குமதி செய்யும் 60 சதவிகித எண்ணெய்க்கும் 25 சதவிகித வரி விதித்தால், உங்கள் பெட்ரோல் விலை எங்கேயோ போய்விடும் என்று தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.