கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்
உலகம்செய்திகள்

கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்

Share

கனடாவில் பரவும் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயானது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மாகாணத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா முழுதும்அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கனடாவின் மேற்கு கெலோனா நகரத்தில் தீயானது வேகமாக பரவி வருவதால் 2,400 வீடுகளில் வசிக்கும் சுமார் 36,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் எல்லோ-நைஃப் நகரத்தை நோக்கியும் தீ வேகமாக பரவி வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் விமானங்கள் ஊடாக வெளியேறி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீப்பரவல் காரணமாக வெளியேற்றப்படுவோரின் எண்ணிக்கை அதிகப்படும் எனவும், சுமார் 15,000 – 20000 வீடுகளில் வசிப்போர் உடனடியாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...