உலகம்செய்திகள்

வாங்க பிஸினஸ் செய்யலாம்… அழைக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

tamilni 428 scaled
Share

வாங்க பிஸினஸ் செய்யலாம்… அழைக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

ஒருபக்கம் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர் முதலானோர் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம், பிரித்தானியாவுக்கு வாங்க, பிஸினஸ் செய்யலாம் என அழைப்பு விடுத்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.

அது பிரித்தானியாவானாலும் சரி, கனடாவானாலும் சரி, ஆட்சி பீடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் நிலை திண்டாட்டம்தான் போலிருக்கிறது.

ஒரு பக்கம், நாட்டுக்கு வெளிநாட்டு வருவாய் வேண்டும், மறுபக்கம், அரசியல்வாதிகளையும், மக்களையும் திருப்திப்படுத்துவதற்காக புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும், என திண்டாடத்தான் செய்கிறார்கள் தலைவர்கள்.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை எல்லை மீறிப்போய்விட்டது. அதனால், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை மட்டுமல்ல, சட்டப்படி பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோரையும் கட்டுப்படுத்தவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார் புதிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி.

ஆனால், புலம்பெயர்ந்தோரே இல்லையென்றால் நாட்டுக்கு எப்படி வருமானம் வரும்? பிரித்தானியர்களால் எல்லா துறைகளிலுமுள்ள, எல்லா அலுவலக இருக்கைகளையும் நிரப்ப முடியாது. நிச்சயம் வெளிநாட்டவர்களை பணிக்கமர்த்தித்தான் ஆகவேண்டும்.

ஆக, பெரிய சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும் விசா வழங்கலாம் என ஒருபக்கம் பேச்சு போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரித்தானியாவிலுள்ள புதுமைக்கு வழிவகுக்கும் நிறுவனங்களில் பாதி நிறுவனங்களின் நிறுவனர்களில் ஒருவர் புலம்பெயர்ந்தவர் என்று கூறி, புலம்பெயர்தலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.

நீங்கள் புதுமைக்கு வழிவகுக்கும் கொள்கை கொண்டவராக இருந்தாலோ, தொழிலதிபராகவோ, ஆராய்ச்சியாளராகவோ இருந்தால், சர்வதேச மிகுதிறன் கொண்டோருக்கு பிரித்தானியாவில் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் ரிஷி.

அதாவது, எளிய வார்த்தைகளில் சொல்லால், திறமை மிக்க தொழிலதிபர்கள் முதலானோர் பிரித்தானியாவுக்கு வாருங்கள், தொழில் செய்யலாம் என்கிறார் ரிஷி!

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...