ஆற்றில் கவிழ்ந்த பேருந்து- 30 பேர் பலி!

1735690 kenya accident

ஆபிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பாசாவுக்கு நேற்றுமுன்தினம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் கீழ் ஓடும் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#World

Exit mobile version