நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்! 40 பேர் மரணம்..நாடொன்றில் கோர சம்பவம்

25 68625dd2b2d09

தான்சானியா நாட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 40 பேர் உயிரிழந்தனர்.

திருமண நிகழ்வில் பங்கேற்க 50க்கும் மேற்பட்டோர் அந்த பேருந்தில் பயணம் செய்தனர்.

குறித்த பேருந்து சபசபா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதன் டயர் வெடித்தது.

இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த சொகுசு பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் இரண்டு பேருந்துகளும் தீ பற்றி எரிந்தன.

இந்த கோர விபத்தில் சிக்கியவர்களில் 40 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version