அடையாள அட்டையை மறந்து வாக்குச்சாவடிக்கு சென்ற பொரிஸ் ஜோன்சன்

24 66350d7b7737f

அடையாள அட்டையை மறந்து வாக்குச்சாவடிக்கு சென்ற பொரிஸ் ஜோன்சன்

அடையாள அட்டையை மறந்து வாக்களிப்பதற்காக உள்ளூர் வாக்குச்சாவடிக்கு சென்ற பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை அதிகாரிகள் திருப்பியனுப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பொரிஸ் ஜோன்சன் ஏற்றுக்கொள்ளக்கூடிய புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வர மறந்ததால், அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்களிக்க சென்றபோதே பொரிஸ் ஜோன்சன் இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.

இதன்பின்னர் பொரிஸ் ஜோன்சன், ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாள அட்டையை கொண்டு வந்து வாக்களித்துள்ளார்.

2022 இல் பிரித்தானிய பிரதமராக இருந்த போது வாக்களிக்க அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் என்ற சட்டத்தை ஜோன்சன் இயற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version