பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் அமெரிக்க ஜனாதிபதி !

202109280357466663 Biden gets COVID19 booster shot after authorization SECVPF

உலகம் முழுவதும் கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பல நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி கொவிட் தொற்றுக்கு எதிராக வீரியமாக செயல்படும் நிலையில் இரண்டு டோஸுக்கு பிறகு பூஸ்டராக மூன்றாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து தடை இருந்து வந்தது.

இந்நிலையில் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அனுமதியளித்துள்ளது.

ஆனால் இரண்டாவது டோஸுக்கு பின்னர் 6 மாதங்கள் கழித்தே பூஸ்டர் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

இவர் தடுப்பூசியின் முதல் டோசை கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதியும் , 2ஆவது டோசை ஜனவரி மாதம் 11 ஆம் திகதியும் செலுத்திக்கொண்டார்.

Exit mobile version