நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் பூஸ்டர்! – ஐரோப்பிய மருத்துவர்கள் எச்சரிக்கை

iStock booster 1200x800 1

ஐரோப்பா கண்டத்தின் பாதி பேர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படுவர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ்
30 கோடிக்கு அதிகமானோர் உலகம் முழுதும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத் தொற்று தற்போது டெல் ரா, ஒமிக்ரோன் என பல்வேறு கோணங்களில் உருமாறி மக்கள் மத்தியில் வீரியத்துடன் பரவி வருகிறது என தெரிவித்துள்ளார்.

மிக வேகமாக பரவிவரும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக, உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் தமது மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. அதிக நாடுகள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை ஏறத்தாழ வழங்கி முடித்துள்ள நிலையில், தற்போது பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை 4 மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செலுத்துவதால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை கருத்தில்கொண்டு இடைவெளி விட்டு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#World

Exit mobile version