download 25 1
உலகம்செய்திகள்

ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு!

Share

ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் ஜப்பான் வயகமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் புமியோ கிஷிடா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டு வெடித்ததால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது. இச்சம்பவத்தில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பத்திரமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிரதமரை பத்திரமாக பாதுகாப்பு வீரர்கள் வெளியேற்றினர்.

பிரதமரை நோக்கி குண்டை வீசியதாக ஒருவரை கைது செய்த ஜப்பான் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததையடுத்து தற்போது பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...