1781339 myanmar air attack
உலகம்செய்திகள்

மியன்மாரில் குண்டுவீச்சு – 80 பேர் உயிரிழப்பு

Share

மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது.

எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆட்சியை கலைத்த அந்நாட்டு இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

ஆங்சான்சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விழா நடைபெற்ற பகுதியில் இராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பார்வையற்றோர், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர்.

நேற்று அந்நாட்டு இராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. எனினும் உயிரிழந்தவர்களில் பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லை என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மியான்மர் இராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது நிராயுதபாணியான பொது மக்களுக்கு எதிராக இராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு இராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.

#Worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...