24 661635261b7af
உலகம்செய்திகள்ஜோதிடம்

ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்

Share

ஓட்டு கேட்க சென்ற இடத்தில் பெண்ணிற்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்

மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் அங்கு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

அங்கு, இந்தியா கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்கத்தின் மால்டா வடக்கு சிட்டிங் எம்.பியாக இருக்கும் ககென் முர்மு பா.ஜ.க சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், அந்த பகுதியில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரச்சாரம் செய்ய சென்ற இடத்தில் அங்கிருந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும், வீடியோக்களையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பரப்பி பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் ககென் முர்மு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “அந்த பெண் என்னுடைய உறவினர் என்றும், அவர் எனக்கு குழந்தை மாதிரி எனவும் கூறியுள்ளார். மேலும், குழந்தையை முத்தமிடுவது தவறில்லை, பெண்களை நான் தாயாக நினைக்கிறேன். அனைத்து பெண்களையும் பாஜக மதிக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...