இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை அடுத்த மாதம் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் சந்திப்பார் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதியை நெருக்கடிகளற்ற, சுதந்திரமான ஒரு பகுதியாக மாற்ற இந்தச் சந்திப்பு வகை செய்யும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
#WorldNews
Leave a comment