உலகம்செய்திகள்

ஆங்கிலம் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய சிறந்த நாடு: பட்டியலில் முன்னிலை வகிக்கும் ஜேர்மனி

Share

ஆங்கிலம் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய சிறந்த நாடு: பட்டியலில் முன்னிலை வகிக்கும் ஜேர்மனி

வெளிநாட்டவர்கள் கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்வேலை செய்ய சிறந்த நாடுகள் பட்டியலில், ஆங்கிலம் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய சிறந்த நாடு என்ற பெயரை ஜேர்மனி பெற்றுள்ளது.

விளங்கக்கூறினால், வெளிநாட்டவர்கள் வேலை செய்ய சிறந்த நாடுகள் பட்டியலில், முதல் நான்கு இடங்களை ஆங்கிலம் பேசும் நாடுகள் பிடித்துள்ள நிலையில், ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது ஜேர்மனி. அதாவது, ஜேர்மனியின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஆங்கிலம் ஒன்று அல்ல. ஜேர்மனியின் அதிகாரப்பூர்வ மொழி ஜேர்மன்தான்.

பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ள நாடு அவுஸ்திரேலியா. இரண்டாவது இடம், அமெரிக்காவுக்கு, மூன்றாவது இடம் கனடாவுக்கு, நான்காவது இடம் பிரித்தானியாவுக்கு.

வெளிநாட்டவர்கள் ஜேர்மனியை வேலை செய்ய சிறந்த நாடுகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கக் காரணம், வேலையின் தரம். அதைத்தொடர்ந்து, வேலை உத்தரவாதம், நல்ல வருவாய், கட்டுப்படுத்தப்படாமல் புதியன கண்டுபிடிக்க அனுமதி மற்றும் ஜேர்மனியின் மருத்துவக் காப்பீடு போன்ற விடயங்களும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியை வேலை செய்ய சிறந்த நாடுகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைகின்றன என்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அதைவிட முக்கியமான விடயம், வேலை தேடுபவர்களில், 77 சதவிகிதம் பேர், தங்களுக்கு எதிர்காலத்தில் வேலை தருபவர், புலம்பெயர்தல் செயல்முறைக்கும் விசா மற்றும் பணி அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கும் குறிப்பிடத்தக்க உதவி செய்வார் என்று நம்புகிறார்கள். இத்தகைய உதவிகள் ஜேர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் என்கிறார்கள் ஆய்வை மேற்கொண்டவர்கள்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...