விவாகரத்தை நோக்கிச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி தம்பதியர்? இணையத்தில் பரவும் வதந்திகள்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான பராக் ஒபாமாவும் அவரது மனைவியான மிச்செல் ஒபாமாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக வதந்திகள் பரவிவருகின்றன.
திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்வோர் பட்டியலில் ஒபாமாவின் பெயர் உள்ளது.
ஆனால், ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமாவின் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை.
இது மிச்செல் ஒபாமா தவிர்க்கும் முதல் நிகழ்ச்சி அல்ல. ஏற்கனவே, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் ஒபாமா மட்டுமே கலந்துகொள்ள, அவரது மனைவியான மிச்செல் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இப்படி தொடர்ச்சியாக மிச்செல் தனது கணவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவருவதால், தம்பதியர் விவாகரத்தை நோக்கிச் செல்கிறார்களோ என இணையத்தில் வதந்திகள் பரவிவருகின்றன.
1989ஆம் ஆண்டு, சிகாகோவிலுள்ள சட்ட நிறுவனம் ஒன்றில் பணி புரியும்போது சந்தித்த ஒபாமாவும் மிச்செலும் 1992ஆம் ஆண்டு திருமணம் செய்த்கொண்டார்கள்.
ஒபாமா மிச்செல் தம்பதியருக்கு மாலியா ஒபாமா மற்றும் சாஷா ஒபாமா என்னும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.