வெளியான மகிழ்ச்சி தகவல் : கனடாவில் குறைக்கப்பட்ட வங்கி வட்டி வீதம்

WhatsApp Image 2024 12 12 at 2.03.41 PM

வெளியான மகிழ்ச்சி தகவல் : கனடாவில் குறைக்கப்பட்ட வங்கி வட்டி வீதம்

கனடாவில் (Canada) வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், ஐந்தாவது தடவையாக மத்திய வங்கி வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்றைய தினம் 0.5 வீதத்தினால் இவ்வாறு வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் ஒரு வீதமாக பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கனடாவில் தொழில் வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version