14 6
உலகம்செய்திகள்

பங்களாதேஸில் வன்முறையாக மாறிய போராட்டம்! 17 பேர் பலி – 100இற்கும் மேற்பட்டோர் காயம்

Share

பங்களாதேஸில் வன்முறையாக மாறிய போராட்டம்! 17 பேர் பலி – 100இற்கும் மேற்பட்டோர் காயம்

பங்களாதேஸில் (Bangladesh) அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாக 17 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 100இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பங்களாதேஸில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தவர்களிற்கு அரசாங்க வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை 2018இல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த முறையின் கீழ் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு அரசவேலைகளில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நடைமுறையை மீண்டும் தொடங்குவதற்கு உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

மாற்றுத்திறனாளிகள் சிறுபான்மை இனங்களை சேர்ந்தவர்களிற்கு ஆறு வித ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வம்சாவளியினருக்கு ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்க்கின்றனர்.

இந்த நடைமுறையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடாத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் அரச தொலைக்காட்சி தலைமையலுவலகத்திற்கு தீ வைத்ததையடுத்து அங்கு பலர் சிக்குண்டனர்.

அதேவேளை, நான்கு வாரங்களில் இது குறித்த தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், மாணவர்களை கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...