வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள், கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதோடு, மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டின் சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் இன்று (நவம்பர் 17) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
போராட்டம் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு: கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.
ஆட்சி கவிழ்ந்த பின், ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராகப் போராடுவோரை சுட்டுக் கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது. இதை ஆதாரமாக வைத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகப் புதிய வழக்கை சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சர்வதேச குற்றத் தீர்ப்பாயம். மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அறிவித்தது. மேலும், அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
ஷேக் ஹசீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் இந்தச் செயல், அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என அவர் சுட்டிக்காட்டினார். “ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம், நீங்கள் (இனவாதிகள் இல்லை என) சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும், உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள்.”