ஐ.நாவில் பணிபுரிவதற்கு பெண்களுக்கு தடை!

OTR6AsjDYODUhJgx1riI 1

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைப்புகளில் பணியாற்றுவதற்கு தலிபான் தடைவிதித்துள்ளது.

தலிபான் வாய்மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும் எழுத்துமூலம் இந்த உத்தரவு கிடைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் வரை ஆப்கானை சேர்ந்த தனது பெண் பணியாளர்களை வேலைக்கு சமூகமளிக்கவேண்டாம் என ஐக்கிய நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுஆப்கானில் நலிந்த நிலையில் உள்ளவர்களை சென்றடைவதை பாதிக்கும் சமீபத்தைய அறிவிப்பு என தெரிவித்துள்ள ஐ.நாவின் பேச்சாளர் பெண் ஊழியர்கள் இல்லாமல் செயற்படுவது கடினம் எனவும் தெரிவித்துள்ளார்.

#world

Exit mobile version